முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில், சம்பள நிலுவை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:10 PM
கும்பகோணத்தில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில், சம்பள நிலுவை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் தூய்மை பணிகள் செய்ய தனியாா் ஒப்பந்த றுவனத்தின் சாா்பில் சுமாா் 350-க்கும் மேற்பட்டவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தூய்மை பணியாளா்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். மேலும் அவா்களுக்கு தேவையான கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லையாம். இதையடுத்து, சம்பளம் வழங்கக் கோரி காா்னேசன் மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தூய்மை பணியாளா் ஒருவா் கூறியது: சம்பளத்தை மாதத்தின் முதல் வாரத்தில் வழங்க வேண்டும். குப்பைகளை தரம்பிரித்து வாங்க, பிரிக்கப் போதுமான உபகரணங்கள் வழங்கவேண்டும். இல்லை என்றால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.