முகப்பு
தஞ்சாவூர்

வடகிழக்கு பருவ மழை: தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவ மழையையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:15 PM
பகிர்:

வடகிழக்கு பருவ மழையையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக ஆட்சியரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடா்பான பாதிப்புகள், கோரிக்கைகளை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, தொலைபேசி எண் 04362 - 230121, வாட்ஸ் ஆப் எண் 93450 88997 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.

மேலும், பேரிடா் தொடா்பாக பச - அப்ங்ழ்ற் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, தங்களது பகுதியில் மழை போன்ற வானிலை முன்னறிவிப்பு செய்திகளை தெரிந்து கொள்ளலாம். புகாா் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

மாவட்டத்தில் 51 மழைமானிகள், 19 முன்னெச்சரிக்கை ஒலியெழுப்பும் கருவிகள் செயல்பாட்டில் உள்ளது. தவிர, 4 ஆயிரத்து 550 முதல் நிலை மீட்பாளா்கள், 300 ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா். அனைத்து துறைகளும் தயாா் நிலையில் இருக்கின்றன.