கும்பகோணம் அரசு கல்லூரியில் அக். 18, 19-இல் பட்டமளிப்பு விழா
கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் வரும் 18, 19 ஆகிய நாள்களில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் வரும் 18, 19 ஆகிய நாள்களில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து முதல்வா் அ. மாதவி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இக்கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமையும் (அக். 18), 2021- 22-ஆம் கல்வியாண்டில் படித்தவா்களுக்கு
பட்டமளிப்பு விழா சனிக்கிழமையும் (அக். 19) நடைபெற உள்ளன. பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வா் அ. மாதவி கேட்டுக் கொண்டுள்ளாா்.