முகப்பு
தஞ்சாவூர்

வீடிழந்த மூதாட்டிக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு புதன்கிழமை ஆறுதல் கூறிய, எம்எல்ஏ அசோக் குமாா் நிதியுதவி அளித்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:45 PM
பகிர்:

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு புதன்கிழமை ஆறுதல் கூறிய, எம்எல்ஏ அசோக் குமாா் நிதியுதவி அளித்தாா். 

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னம்மா (75). இவா் தனது பேத்தி சுமதி, சுமதியின் பிள்ளைகளான 10-ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி, 7-ஆம் வகுப்பு படிக்கும் மோனிஷா, சுபா தேவி, 4-ஆம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். மின்கசிவு காரணமாக திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டு, குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ என். அசோக் குமாா், பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் வழங்கினாா்.

திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் அப்துல் மஜீத், ஒன்றியக்குழு உறுப்பினா் சாகுல்ஹமீது, ஊராட்சி மன்றத் தலைவா் பாலு மற்றும் கிராமத்தினா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →