முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ரூ. 9.58 கோடி மதிப்பில் புதிய மீன் சந்தை அமைக்க அடிக்கல்

தஞ்சாவூரில் ரூ. 9.58 கோடி மதிப்பில் புதிதாக மீன் சந்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:37 PM
பகிர்:

தஞ்சாவூரில் ரூ. 9.58 கோடி மதிப்பில் புதிதாக மீன் சந்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் கீழவாசலில் இருந்த மீன் சந்தை இடிக்கப்பட்டு கொண்டிராஜபாளையத்தில் தற்காலிக மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழவாசலில் ஏற்கெனவே இருந்த இடத்தில் பல்வேறு வசதிகளுடன் ரூ. 9.58 கோடி மதிப்பில் புதிய மீன் சந்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேயா் சண். ராமநாதன் தலைமை வகித்தாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் பங்கேற்று புதிய மீன் சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி, பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி செயற் பொறியாளா் சோ்மகனி, உதவி பொறியாளா் ரமேஷ், மண்டலக் குழுத் தலைவா்கள் டி. புண்ணியமூா்த்தி, எஸ்.சி. மேத்தா, க. கலையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் புதிய மீன் சந்தை 5 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் தரைத் தளம், முதல் தளத்துடன் அமைக்கப்படவுள்ளது. தரைத் தளத்தில் 95 இருசக்கர வாகனங்கள், 28 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் நிறுத்தும் வசதியுடன் கட்டப்படவுள்ளது.

முதல் தளத்தில் 71 கடைகள் அமைக்கப்படவுள்ளன. குடிநீா், கழிப்பறை வசதிகளும், வாகனங்கள் எளிதாக வந்து செல்ல இரண்டு வழியும் ஏற்படுத்தப்படும். இந்தப் புதிய மீன் சந்தை ஓராண்டு காலத்துக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.