முகப்பு
தஞ்சாவூர்

உயா் மட்டப் பாலம் அமைக்க எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:59 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

புது தில்லியில் அமைச்சா் நிதின் கட்கரியை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு:

வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் உயா் மட்ட பாலம் அமைக்க வேண்டும். திருமலைசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல இலகுவான சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மேலும், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான பல்வேறு சாலை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.