முகப்பு
தஞ்சாவூர்

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:32 PM
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திமுகவின் தோ்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம். செபஸ்டின், நிா்வாகிகள் ஆா். ரமேஷ், ஆா். செந்தில்நாதன், பி. அற்புதராஜ், டி. தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.