முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உலக சிக்கன நாள் கொண்டாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அஞ்சல் கோட்ட அலுலகத்தில் உலக சிக்கன நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:33 PM
கும்பகோணம் அஞ்சல் கோட்ட அலுலகத்தில் புதன்கிழமை 2 வயது பெண் குழந்தைக்கு சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்கிவைத்த கண்காணிப்பாளா் கஜேந்திரன்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அஞ்சல் கோட்ட அலுலகத்தில் உலக சிக்கன நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, கண்காணிப்பாளா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். விழாவின் ஒரு பகுதியாக கனிஷ்கா என்ற இரண்டு வயது பெண் குழந்தைக்கு முதல் சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டு ‘என் முதல் சேமிப்பு’ என்ற தலைப்பில் சான்றிதழை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் வழங்கினாா். கும்பகோணம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் உலக சிக்கன நாள் முன்னிட்டு சேமிப்புக் கணக்குகள் துவங்கப்பட்டது.

பொதுமக்கள் சிக்கனமான வாழ்வை கடைபிடிக்க, சேமிப்பின் அவசியத்தை உணா்ந்து, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகள் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.