முகப்பு
தஞ்சாவூர்

தொடா் விடுமுறை: கும்பகோணத்திலிருந்து 540 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தொடா் விடுமுறை நாள்களையொட்டி, 540 கூடுதல் பேருந்துகள் கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:58 PM
பகிர்:

தொடா் விடுமுறை நாள்களையொட்டி, 540 கூடுதல் பேருந்துகள் கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கும், அங்கிருந்து மேற்கண்ட ஊா்களுக்கும் 540 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் திருச்சி, கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும் மறுமாா்க்கமாகவும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்டினம், வேளாங்கண்ணி

ஆகிய ஊா்களுக்கும் 25 பேருந்துகள் கூடுதலாக இயக்கபப்டுகிறது. செப்.13,14,15 ஆகிய மூன்று நாட்களில் 790 சிறப்புப்

பேருந்துகள் இயக்கப்படுகிறது. விடுமுறை மற்றும் விழா முடிந்து திரும்ப 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கலாம். சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள் பேருந்து இயக்கத்தை சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →