முகப்பு
தஞ்சாவூர்

கூட்டுறவு சங்க மண்டல அலுவலகத்தில் நாளை பணியாளா் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:36 PM
பகிர்:

தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோரின் குறைகளை தீா்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா்களின் குறைகள் தீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளா்கள் தங்களது பணி தொடா்பான குறைகள் இருந்தால் மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின்போதும் வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்களாக அளிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →