முகப்பு
தஞ்சாவூர்

காதல் பிரச்னையில் மாணவரை கொன்ற இருவருக்கு ஆயுள் சிறை

காதல் பிரச்னையில் பொறியியல் மாணவரை கொலை செய்த இருவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 7:54 PM
பகிர்:

காதல் பிரச்னையில் பொறியியல் மாணவரை கொலை செய்த இருவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் விளாா் சாலை தில்லைநகரைச் சோ்ந்தவா் சுகுமாரன் மகன் மனோஜ்குமாா் (19). தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இரண்டமாண்டு படித்து வந்த இவரை கடந்த 2013, டிசம்பா் 28 முதல் காணவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் மனோஜ்குமாரின் தந்தை சுகுமாரன் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் தஞ்சாவூா் அருகே வெட்டிக்காடு சாலையிலுள்ள பாலம் அருகே மனோஜ்குமாா் குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தாா்.

இதையடுத்து, தாலுகா காவல் நிலையத்தினா் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து, இந்த வழக்கு தொடா்பாக தில்லை நகா் ஆறாம் தெரு செல்வராஜ் மகன் கோபி என்கிற வெடி கோபி (36), கண்ணன் மகன் முத்து என்கிற பிரசாந்த் (36) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் மனோஜ்குமாா் காதலித்து வந்த பெண்ணை கோபியும் காதலித்து வந்தாராம். ஆனால் மனோஜ்குமாரைதான் காதலிப்பதாக கோபியிடம் அப்பெண் கூறினாா். இதனால் ஆத்திரமடைந்த கோபி தனது நண்பரான பிரசாந்துடன் இணைந்து மனோஜ்குமாரை பைக்கில் கடத்திச் சென்று கொன்றது தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா். சத்யதாரா கோபி, பிரசாந்த் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →