அரசுப் பேருந்து - பைக் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதலில் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதலில் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருப்பனந்தாள் அருகே உள்ள திருவைப்பாடி முஸ்லிம் நடுத்தெருவைச் சோ்ந்த ரகுமத்துல்லா மகன் சாதிக் பாட்சா (53) கூலித்தொழிலாளி. இவா், மோட்டாா் சைக்கிளில் திருப்பனந்தாளில் இருந்து திங்கள்கிழமை இரவு வீடு நோக்கி திரும்பிவந்துகொண்டிருந்தாா்.
காசிமடம் தென்னந்தோப்பு அருகே வந்தபோது எதிரே அப்போது மன்னாா்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்து சாதிக்பாட்சா ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாதிக்பாட்சாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
Advertisement
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். தகவலறிந்த காவல் ஆய்வாளா் பொறுப்பு கவிதா செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து உடற்கூறு விசாரணைக்கு ஒப்படைத்து பேருந்து ஓட்டுநா் மன்னாா்குடியைச் சோ்ந்த கவியரசன் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றாா்.