முகப்பு
தஞ்சாவூர்

உலக தற்கொலை தடுப்பு தினக் கருத்தரங்கம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 2:28 AM
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மன நல மருத்துவத் துறை, தஞ்சாவூா் மன நல மருத்துவக் கழகம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் என். ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

சென்னை மூத்த மனநல மருத்துவப் பேராசிரியா் வி. ஜெயந்தினி, வேலூா் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் வி. ஜெயக்குமாா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மூத்த துணைப் பேராசிரியா் ஜி. அன்பழகன், திருவாரூா் மருத்துவக்கல்லூரி துணைப் பேராசிரியா் ஜெ. பாபு பாலசிங் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

Advertisement

இக்கருத்தரங்கத்தில் தற்கொலையைத் தடுப்பதற்காக தமிழக அரசின் மருத்துவத் துறை மூலம் மனநல கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்கள் 14416 மற்றும் 104 செயல்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

இதில், பேராசிரியா் இ. மீனாட்சி, மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலிய மாணவா்கள் கலந்து கொண்டனா்.