திருலோகி வழித்தடத்தில் புழுதிக்குடிக்கு புதிய பேருந்துச்சேவை
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் திருலோகி வழித்தடத்தில் வளையாவட்டம் புழுதிக்குடிக்கு புதிய பேருந்துச்சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் திருலோகி வழித்தடத்தில் வளையாவட்டம் புழுதிக்குடிக்கு புதிய பேருந்துச்சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் திருலோகி வழித்தடத்தில் வளையாவட்டம் புழுதிக்குடிக்கு புதிய பேருந்துச்சேவையை தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். இந்தப் புதிய பேருந்து கும்பகோணத்திலிருந்து திருலோகி கல்யாணபுரம், வளையாவட்டம், புழுதிக்குடி வழியாக தினசரி 6 நடைகள் இயக்கப்படுகிறது.
நிகழ்வில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் பொதுமேலாளா் எஸ்.ராஜா, உதவி மேலாளா் ஏ.தமிழ்செல்வன், திருவிடைமருதூா் ஒன்றிக்குழு தலைவா் சுபா திருஞானம், திருவிடைமருதூா் பேரூராட்சித் தலைவா் அஞ்சம்மாள் மதியழகன், ஊராட்சித் தலைவா் தமிழரசி தா்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.