தஞ்சாவூரில் ரௌடி வெட்டிக் கொலை
தஞ்சாவூா் கரந்தையில் புதன்கிழமை இரவு ரௌடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் கரந்தையில் புதன்கிழமை இரவு ரௌடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் அறிவழகன் (40). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவா் மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவா் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் தனது நண்பா்களுடன் இணைந்து புதன்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அரிவாளால் வெட்டப்பட்ட அறிவழகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.