தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
தஞ்சாவூா் வைரம் கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் வைரம் கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து தெரிவித்தது:
இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் மற்றும் பருத்தி சேலைகள், லினன் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சாவூா் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ. 1.29 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 1.57 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனத்தில் கோ - ஆப் டெக்ஸ் மாதாந்திரச் சேமிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில், 11 மாத சந்தா தொகையை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-ஆவது மாத சந்தா தொகையை கோ - ஆப் டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வு தொகைக்குத் தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோ - ஆப் டெக்ஸ் இணையதளம் வாயிலாகவும் வாடிக்கையாளா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற ஜவுளி ரகங்களை தோ்வு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்ச்சியில் கோ - ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவு மேலாளா் (கூடுதல் பொறுப்பு) இ. அய்யப்பன், தஞ்சாவூா் வைரம் கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் த. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.