FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குத் தனி வாட்ஸ் ஆப் கணக்குகள் அறிமுகம்!

வாட்ஸ் ஆப் செயலி 13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி...

வாட்ஸ் ஆப் - கோப்புப்படம்
பகிர்:

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி 13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் நிர்வகிக்கக் கூடிய வாட்ஸ் ஆப் கணக்கு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

”பெற்றோர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு புதிதாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் நிர்வகிக்கும் வாட்ஸ் ஆப் கணக்குகளை 13 வயதுதுக்குள்பட்ட சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இதன்மூலம், அவர்கள் அனுப்பும் செய்திகள் மற்றும் உரையாடல்களை பெற்றோர் கண்காணிக்க முடியும்” என வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது இணையப் பதிவில் தெரிவித்துள்ளது.

தொடர்பு கொள்வோர் பட்டியலை பெற்றோர் நிர்வகிக்க முடியும் என்றாலும் செய்தி அனுப்புவது தொடர்பான பாதுகாப்பு வாட்ஸ் ஆப் செயலியின் தற்போதைய முறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் சாதனத்தில் பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் அமைப்புகளை தனியே ’பேரண்ட் பின்’ எனப்படும் பாஸ்வர்ட் மூலம் பெற்றோர் நிர்வகிக்கலாம் என்றும், அதனை அவர்கள் மட்டுமே மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு சில அம்சங்கள் படிப்படியாக கொண்டுவரப்படவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

summary

WhatsApp launches parent-managed accounts for children under 13


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments