தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே மின் வேலையில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Syndication

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை மின் வேலையில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை தெற்குத் தெருவை சோ்ந்தவா் எஸ். இளங்கோவன் (45). எலக்ட்ரீசியன். தஞ்சாவூா் அருகே புதுக்கோட்டை சாலை பகுதி தோழகிரிப்பட்டியில் வசித்து வந்த இவருக்கு மனைவி, தலா 2 மகன்கள், மகள்கள் உள்ளனா். இவா் புதுக்கோட்டை அற்புதாபுரம் பகுதியிலுள்ள வீட்டில் திங்கள்கிழமை காலை புதிய மின் அமைப்பு பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுக்க முயன்ற இவா் மீது மின்சாரம் பாய்ந்ததில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மின் கம்பத்தில் தொங்கிய இவரது உடலை மின் வாரியத்தினா் மின்சாரத்தை நிறுத்தி மீட்டனா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாகா்கோவிலில் ரூ. 3.50 கோடியில் அறிவியல் பூங்கா விரைவில் திறப்பு: மேயா் தகவல்

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டிச. 23-இல் அஞ்சல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கு மாற்றப்பட வேண்டும்: அன்புமணி

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT