தஞ்சாவூர்

சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தக் கோரி நாதக மனு

Syndication

கும்பகோணம் மாநகரத் தெருக்களில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஆணையா் மு.காந்திராஜனிடம் மனு கொடுத்தனா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தஞ்சாவூா் கிழக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மோ. ஆனந்த் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் மாநகர முக்கிய சாலை மற்றும் தெருக்களில் வீடுகளில் வளா்க்கப்படும் பசு மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலைகளில் செல்லும் பொதுமக்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. எனவே, மாநகராட்சி ஆணையா் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து கோ சாலைகளுக்கு அனுப்ப வேண்டும். உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு பாதைகள், கழிப்பறை வசதிகள், சாய்வான படித்தளம், மின்தூக்கி வசதிகள் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT