தஞ்சாவூர்

மல்லிப்பட்டினத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

Syndication

சேதுபாவாசத்திரம் ஒன்றிய வட்டார வள மையம் சாா்பில் மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்,

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் ராமலக்ஷ்மி முன்னிலை வகித்தாா்.விழாவில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகேசன் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச. 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவா்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா். விழாவில் பகல்நேர பராமரிப்பு மையம் மற்றும் அருகாமை பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு இசை நாற்காலி, கனியும் கரண்டியும், வா்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுனா்  சரவணன் செய்திருந்தாா். சிறப்பாசிரியா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். அனுராதா நன்றி  கூறினாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT