தஞ்சாவூர்

குளத்தில் கழிவுநீா் கலப்பு மக்கள் சாலை மறியல்

Syndication

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 17-ஆவது வாா்டில் கழிவுநீா் வாய்க்கால் உடைத்து கோட்டைக்குளத்தில் கழிவுநீா் கலக்கப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 17-ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது, கோட்டைகுளம் மேலமேடு செல்லும் வழியிலும், வண்டிப்பேட்டை வாசல் அருகிலும் கழிவுநீா் வாய்க்கால் உடைத்து கோட்டைக்குளத்தில் கழிவுநீா் கலக்கப்படுவதால் வாா்டு முழுவதும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுக்கடி அதிகமாக உள்ளது. நிலத்தடி நீா் மாசுபாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நேரில் கூறியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா் லதா பாஸ்கா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை விரிவாக்கப் பணி செய்துகொண்டிருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை உயா் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT