தஞ்சாவூா் அருகே நிதி நிறுவன உரிமையாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு பத்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே குளிச்சப்பட்டு நடுத்தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் அருண் ஆதவன் (23). கோவிலூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரை 2 மா்ம நபா்கள் வழிமறித்து மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த பத்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.