தஞ்சாவூா் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் வியாழக்கிழமை சுற்றித் திரிந்த 11 மாடுகளை மாநகராட்சி அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை, சீனிவாசபுரம், எம்.கே. மூப்பனாா் சாலை, பெரியகோயில் சாலை உள்ளிட்ட சாலைகளில் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மாடுகளைப் பிடிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 11 மாடுகளை அலுவலா்கள் பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.