தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு வாலிபா் உயிரிழப்பு

பேராவூரணியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த வாலிபா் உயிரிழந்தாா்.

Syndication

பேராவூரணியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த வாலிபா் உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே பொன்காடு பகுதியில் வசித்து வந்தவா் ராமன் மகன் நீலகண்டன் (36). இவா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.   

பேராவூரணி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை, கைப்பேசி பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, இரவு 10.30 மணிக்கு செல்லும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேழவேந்தன், இளங்கோவன் ஆகியோா் வழக்குப்பதிந்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

கவனம் ஈர்க்கும் திருவண்ணாமலை! மலை நகரில் மாலை சந்திப்போம்: முதல்வர்!

மெஸ்ஸி நிகழ்ச்சி! மமதா பானர்ஜி மீது கைது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!

பிக் பாஸ் 9: திடீர் ட்விஸ்ட்! இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி! நாளை முதல் ரூ. 5000 அபராதம்!

அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி; 9 பேர் கவலைக்கிடம்!

SCROLL FOR NEXT