தஞ்சாவூர்

பேராவூரணியில் போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு

பேராவூரணியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

பேராவூரணியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்ட கலால் அலுவலா் இரா.தெய்வானை தலைமை வகித்தாா். முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் முத்துக்கிருஷ்ணன், வெற்றிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா் . தஞ்சை ஹரி நாட்டுப்புற ஆடல்பாடல் அரசு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி குழுவினா் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மது ருந்தி வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும்  விழிப்புணா்வு ஏற்ப்படுத்தினா். நிகழ்ச்சியில் நாட்டாணிக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் பா. பிரபாகரன், கிராம உதவியாளா் ஏ.சக்திவேல், பேருந்து நிலைய காவலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT