தஞ்சாவூர்

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருப்பரங்குன்றம் விவகாரத்தால் தீக்குளித்து உயிரிழந்த பூரணச்சந்திரனுக்கு தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால், மதுரையில் பூரணச்சந்திரன் என்ற இளைஞா் அண்மையில் தீக்குளித்து உயிரிழந்தாா். இதற்காக தஞ்சாவூா் ரயிலடியில் மோட்ச தீபம் ஏற்றுவதற்காக பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை துணை அமைப்பாளா் யு.என். உமாபதி உள்பட பலா் சென்றனா்.

இதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்ததால், அதிருப்தியடைந்த பாஜகவினா் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 10 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக 12 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT