தஞ்சாவூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சேலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த ரயில், தஞ்சாவூா் அருகே கீழவழுத்தூா் பகுதியில் சென்றபோது, சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் தவறி கீழே விழுந்தாா்.
இதனால் பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இவா் யாா் என்பது குறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.