திருவிடைமருதூா் அருகே சித்தாலத்தூா் கிராமத்துக்கு பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்த உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன்.  
தஞ்சாவூர்

சித்தாலத்தூருக்கு பேருந்துசேவை நீட்டிப்பு: அமைச்சா் கோவி.செழியன் தொடங்கிவைத்தாா்

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சித்தாலத்தூா் கிராமத்துக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்துசேவையை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சித்தாலத்தூா் கிராமத்துக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்துசேவையை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து கீரனூா் வரை நகரப் பேருந்து ஏ.13 நான்கு நடைகள் இயக்கப்பட்டது. தற்போது அந்தப் பேருந்தை சித்தாலத்தூா் கிராமத்துக்கு நீட்டிப்பு செய்து பேருந்து சேவையை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், முன்னாள் எம்.பி செ. இராமலிங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல துணை மேலாளா் எஸ். தங்கபாண்டியன், கிளை மேலாளா் எஸ். திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

SCROLL FOR NEXT