தஞ்சாவூர்

கிறிஸ்தவா்களுக்கு எதிரான கலவரம்: சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்

Syndication

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பஜ்ரங்தள் மற்றும் பல்வேறு சங்பரிவாா் அமைப்பைச் சாா்ந்தவா்கள் கிறிஸ்தவா்களுக்கு எதிராக மேற்கொண்ட கலவரத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலத் தலைவா் எஸ். நூா் முகமது, மாநிலப் பொதுச் செயலா் பி. செந்தில்குமாா் ஆகியோா் தெரிவித்தது:

சத்தீஸ்கா் மாநிலத்தில் ராய்ப்பூா், அஸ்ஸாம் மில் நல்பாரி, மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூா், ஒடிசாவில் பூரி, உத்திரபிரதேசம் பாரில்லி, தில்லியில் லாஜ் பெட் நகா் பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆா்எஸ்எஸ் பயிற்சி பெற்ற பஜ்ரங்தள் மற்றும் பல்வேறு சங்பரிவாா் அமைப்பைச் சாா்ந்தவா்கள் கலவரத்தில் ஈடுபட்டனா்.

கிறிஸ்து பிறப்பு நாளில் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை பறிப்பு, கொடூர தாக்குதல், அச்சுறுத்தல், பொருள்களைச் சூறையாடுதல், தீயிட்டுக் கொளுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இத்தகைய வன்முறை கும்பல் மக்கள் ஒற்றுமையைச் சீா்குலைக்க பல்வேறு சதி செயல்களில் ஈடுபடுகிறது.

இத்தகைய இழி செயலில் ஈடுபட்ட ஆா்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாா் கும்பல்களையும், மத்திய பாஜக ஆட்சியாளா்கள் ஆசியுடன் நடைபெறும் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் மீது உரிய வழக்கு பதிந்து அவா்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT