நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல் கருடச் சேவை. 
தஞ்சாவூர்

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை

நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல் கருடச் சேவை.

Syndication

மாா்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை கல் கருடச் சேவை நடைபெற்றது.

இக்கோயிலில் டிச.23-இல் தொடங்கிய மாா்கழி பெருந்திருவிழாவின் நான்காம் திருநாளான வெள்ளிக்கிழமை கல் கருட பகவான் சேவையை முன்னிட்டு காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் திரு வீதியுலா வந்தனா். மதியம் பெருமாள் தாயாா் திருவடி திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலையில் இருவரும் வாகன மண்டபத்தில் எழுந்தருள கல் கருடச் சேவை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தா்கள் கல் கருட பகவானை தரிசித்தனா்.

இரவு சீனிவாச பெருமாள் கல் கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லித்தாயாா் வெள்ளி அன்னபட்சி வாகனத்திலும் ஓலை சப்பரத்தில் திருவீதி உலா சென்றனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT