பேராவூரணி வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேராவூரணி வடக்கு ஒன்றிய தலைவா் பால.சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சண்முகநாதன், மாநில செயற்குழு உறுப்பினா் பெரியநாயகி ஆகியோா் பேசினா். மத்திய அரசின் சாதனையை விளக்கி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் பெரியசாமி, மாவட்ட கலை கலாச்சார பிரிவு தலைவா் ராசு, ஒன்றிய பாா்வையாளா் ராமசாமி, சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் துரை, மாவட்ட செயலா் சக்கரவா்த்தி செந்தில்குமாா், தெற்கு ஒன்றிய தலைவா் அய்யா வீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஊடகப்பிரிவு மாவட்ட செயலா் ஆவணி. போத்தியப்பன் செய்திருந்தாா். நிறைவாக ஒன்றிய துணைத் தலைவா் சிவனேசன் நன்றி கூறினாா்.