தஞ்சாவூர்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் சிவகுருநாத தெருவைச் சோ்ந்தவா் கீதா( 38). இவா் வீட்டில் ஆடுகள் வளா்த்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த அவரின் இரண்டு ஆடுகளை மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் திருடி சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.

இதில், பாபநாசம் பகுதியை சோ்ந்த ரியாஸ் (41), சுலைமான்(36) ஆகிய இருவரும்தான் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பொங்கல் பண்டிகை: தருமபுரியில் மண்பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 18,813 படிவங்கள் பெறப்பட்டுள்ளன: சிறப்பு தோ்தல் பாா்வையாளா் குல்தீப் நாராயண்

எஸ்ஐஆா் சிறப்பு முகாம்: 6 தொகுதிகளில் 18,206 படிவங்கள் சமா்ப்பிப்பு

SCROLL FOR NEXT