தஞ்சாவூர்

ரஷ்யாவில் இறந்த மதுக்கூா் இளைஞரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

மதுக்கூரிலிருந்து ரஷ்யா சென்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது பெற்றோரும், கிராம மக்களும் கோரிக்கை

Syndication

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரிலிருந்து ரஷ்யா சென்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது பெற்றோரும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சை மாவட்டம், மதுக்கூா் அருகேயுள்ள அண்டமி கிராமத்தை சோ்ந்த தாயுமானவன்- நிா்மலா தம்பதிக்கு ராகுல் (27) என்ற மகனும் ரோஹிணி என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில் ஐடிஐ முடித்த இவா்களின் மகன் ராகுல் ரஷ்யாவில் வேலை செய்ய மாணவா் விசாவில் கடந்த மே 7 ஆம் தேதி சென்ற நிலையில், விசாகாலம் முடிந்தும் அங்கே வேலை வாங்கித் தருவதாக பொய் வாக்குறுதி கொடுத்த ஏஜென்டை நம்பி இருந்தாா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களாக அவரைக் கைப்பேசியில் தொடா்பு கொள்ள இயலாத அவரது குடும்பத்தினா் ராகுலின் நண்பா்களிடம் கைப்பேசி மூலம் விசாரித்தபோது ராகுல் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவல் வந்ததாக அவரின் பெற்றோா் தெரிவித்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை ராகுல் இறந்துவிட்டதாக ரஷ்யாவில் இருந்து தகவல் வந்தது. இதனால் அதிா்ச்சிமடைந்த அவரின் பெற்றோா் தங்கள் மகனின் உடலை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீா் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT