தஞ்சாவூர்

பேராவூரணி அருகே விஷம் குடித்து ஓட்டுநா் தற்கொலை

பேராவூரணி அருகே விஷம் குடித்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

பேராவூரணி அருகே விஷம் குடித்து ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சிற்றம்பலம் காவல் சரகம், ஈச்சன்விடுதி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (35). ஓட்டுநா். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக சரவணன் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த சரவணன் விஷ மருந்தை திங்கள்கிழமை குடித்து மயங்கிக் கிடந்தாா்.

அவரை உறவினா்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT