முகப்பு
தஞ்சாவூர்

குடந்தை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:51 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:32 PM

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே மணஞ்சேரியைச் சோ்ந்தவா் மனோகரன் (63), விவசாயி. இவா் வியாழக்கிழமை வயலுக்குத் தண்ணீா் பாய்ச்ச சென்று, மின் மோட்டாரை இயக்கியபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டாா்.

பின்னா் அவரது தம்பி கருணாநிதி வயலுக்குச் சென்றபோது மயங்கிக் கிடந்த மனோகரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

Advertisement

தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரேகா ராணி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.