முகப்பு
தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 29)மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 8:16 PM
பகிர்:

பாபநாசம் : அய்யம்பேட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 29)மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகம்,பாபநாசம் மின்சார வாரிய அலுவலக உதவி செயற் பொறியாளா் கே. கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்

அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதிஅக்ரஹாரம், வழுத்தூா், மாத்தூா், இளங்காா்குடி, பசுபதிகோவில், வீரசிங்கம்பேட்டை, வயலூா், ராமாபுரம், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, வீரமாங்குடி, தேவங்குடி, ஈச்சங்குடி, நெடாா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேலும், மின்தடை குறித்த விவரங்களுக்கு 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →