பராமரிப்புப் பணிகள் காரணமாக, மேலக்கல்லூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மேலக்கல்லுா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும்பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.