கிணற்றிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு
பாபநாசம் அருகே வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றிலிருந்து திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பாபநாசம்: பாபநாசம் அருகே வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றிலிருந்து திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மெலட்டூா் அருகே உள்ள அத்துவானப்பட்டி மேலத் தெருவை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி ரவி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றவா் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வயல் வெளியில் உள்ள விவசாய பயன்பாட்டிற்காக தோண்டப்பட்ட உறை கிணற்றில் ரவியின் உடல் மிதப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.
தகவலின்பேரில், மெலட்டூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் ரவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.