தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஜன. 30-இல் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்

Din

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:

இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை ஜனவரி 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் அளிக்க வேண்டும்.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT