கோப்புப்படம்  
தஞ்சாவூர்

பிளஸ் 2: தஞ்சாவூர் 13-ஆவது இடம்!

பிளஸ் 2 தேர்வில் தஞ்சாவூர் மாவட்ட தேர்ச்சி நிலவரம் பற்றி...

DIN

தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 553 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 25 ஆயிரத்து 438 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.80 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 2.34 சதவீதம் கூடுதல். இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 307 மாணவர்களில் 11 ஆயிரத்து 584 பேரும், 14 ஆயிரத்து 246 மாணவிகளில் 13 ஆயிரத்து 854 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 104 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 93.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், அரசு பள்ளிகளில் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 65 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு பள்ளிகள் 14 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT