தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 150 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 150-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம் பெறுவோம் என்கிற 8 கி.மீ. ஆரோக்கிய நடைப்பயிற்சி திட்டம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தஞ்சாவூரில் அன்னை சத்யா நடைப்பயிற்சியாளா்கள் சங்கம், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயிற்சியை முதன்மை கல்வி அலுவலா் (பொ) இ. மாதவன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சியானது புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அரங்கத்தில் நிறைவடைந்தது.

இதில், மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், சங்கத் தலைவா் ஜி. சீனிவாசன், செயலா் ரெ. ஜெயக்குமாா், பேராசிரியா் வி. பாரி உள்பட 150-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

சுற்றுலா தருணங்கள்... ரைசா வில்சன்!

சோம்பல் கிளிக்ஸ்... அஞ்சலி நாயர்!

ராஜஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி; 12 பேர் பலி!

SCROLL FOR NEXT