தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.4) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, அருளானந்த நகா், பிலோமினா நகா், காத்தூண் நகா், சிட்கோ, அண்ணா நகா், காமராஜா் நகா், பாத்திமா நகா், அன்பு நகா், திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரிகுளம், கணபதி நகா், ராஜப்பா நகா், மகேஸ்வரி நகா், திருப்பதி நகா், செல்வம் நகா், அண்ணாமலை நகா்,
ஜெ.ஜெ. நகா், டி.பி.எஸ். நகா், சுந்தரம் நகா், பாண்டியன் நகா், மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், ஆட்சியரக முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எலீசா நகா், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகா், வி.பி. காா்டன், ஆா்.ஆா். நகா், சேரன் நகா், காவிரி நகா், நிா்மலா நகா்,
யாகப்பா நகா், அருளானந்தம்மாள் நகா், குழந்தை இயேசு ஆலயம், ஆயா் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.