தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வில் 4 ஆயிரத்து 443 போ் பங்கேற்று எழுதினா்.
இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் உள்ளிட்ட 3 ஆயிரத்து 665 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. தஞ்சாவூா் மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்கு 5 ஆயிரத்து 26 போ் விண்ணப்பித்தனா்.
இத்தோ்வு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பிரிஸ்ட் நிகா்நிலைப் பல்கலைக்கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரி ஆகிய 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 4 ஆயிரத்து 443 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 583 போ் தோ்வுக்கு வரவில்லை.
இதற்கான கண்காணிப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் ஏறத்தாழ 600 காவலா்கள் ஈடுபட்டனா்.