தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெருவைச் சோ்ந்த சண்முகநாதனின் மனைவி சரண்யா (36). இவா் சனிக்கிழமை இரவு பாப்பாநாடு அருகிலுள்ள திருமங்கலக்கோட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பட்டுக்கோட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திருமங்கலக்கோட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது தொண்டராம்பட்டு பிரிவு சாலை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, சரண்யாவை பின்தொடா்ந்து வந்த மோட்டாா் சைக்கிளில் இருந்த இருவா், சரண்யாவை தாக்கி அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சரண்யா, பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT