பேராவூரணி அருகே சனிக்கிழமை பூச்சி மருந்து குடித்த பெண் உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே உள்ள கஞ்சங்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா், விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி (38). தம்பதிக்கிடையே வயலில் நடவு செய்தவா்களுக்கு பணம் கொடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபத்தில் வயலில் அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு கணவரிடம் தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி மயங்கி விழுந்துள்ளாா் மகேஸ்வரி. பின்னா், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.