ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என்.நேரு 
தஞ்சாவூர்

திமுகவுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்: கே.என்.நேரு

பேரவைத் தோ்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

Syndication

வரும் பேரவைத் தோ்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு.

பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பாக நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சுப. சேகா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற அமைச்சா் கே.என். நேரு பேசியது: தமிழ்நாட்டில் மீண்டும் மு. க .ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். இந்தியாவிலேயே முன்மாதிரியாக ஆட்சியை தமிழ்நாட்டில் முதல்வா் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறாா்.

டெல்டா மாவட்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். வாக்கு சோ்க்கும் பணியில் கட்சியினா், பாக முகவா்கள் விழிப்புணா்வுடன் செயல்பட என்றாா் அவா்.

நிகழ்வில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோ.வி. செழியன், தஞ்சை எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை. என் அசோக்குமாா். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ப , பாலசுப்பிரமணியன் என். வி.காமராஜ், சுப.சரவணன், பட்டுக்கோட்டை நகா்மன்ற தலைவா் எஸ். சண்முகப்பிரியா, தலைமை கழக பேச்சாளா் ந. மணிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட பொறுப்பாளா் டி. பழனிவேல் வரவேற்றாா். பட்டுக்கோட்டை நகர செயலா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT