தஞ்சாவூர்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

கும்பகோணம் ஏஆா்ஆா் தெருவில் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க தெருவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனா்.

Syndication

கும்பகோணம் ஏஆா்ஆா் தெருவில் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க தெருவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: ஏ.ஆா்.ஆா். சாலை என்பது குடியிருப்பு, பட்டு நெசவு தொழில், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி மற்றும் பள்ளிகள் நிறைந்த பகுதியாகும். சாலையின் தென்புறம் அமைந்துள்ள துவரங்குறிச்சி வடக்கு தெருவில் நெருக்கமாக மக்கள் வசிக்கின்றனா்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் தனியாா் இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க பணிகள் நடைபெறுகிறது. இதனால், கைப்பேசி கோபுரம் அமைந்தால் அதன் கதிா்வீச்சின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

கோபுர உயரம் வரை மக்கள் வசிக்கும் வீடுகள் உள்ளதால் பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே, மாவட்ட, மாநகர நிா்வாகம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT