தஞ்சாவூர்

சுங்கான் திடல் - புறவழிச்சாலை ரூ. 6 கோடியில் புதுப்பிப்பு: தஞ்சாவூா் மேயா் தகவல்

தஞ்சாவூா் கரந்தை அருகே சுங்கான் திடல் - புறவழிச்சாலை அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன்.

Syndication

தஞ்சாவூா் கரந்தை கோடியம்மன் கோயில் அருகேயுள்ள சுங்கான் திடல் - புறவழிச்சாலை ரூ. 6.50 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படுவதாக மேயா் சண். ராமநாதன் தெரிவித்தாா்.

இச்சாலை அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: குண்டும் குழியுமாக இருந்த இச்சாலையை மாற்றி புதிதாக தாா்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, இத்திட்டத்துக்கு தமிழக முதல்வா் ரூ. 6.50 கோடியும், இருபுறமும் மின் விளக்குகள் அமைக்க ரூ. 18 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இப்பகுதியில் களிமண் இருப்பதால், சாலைகள் அடிக்கடி சேதமடைகின்றன. இதைத் தவிா்க்க ஏறத்தாழ ஒரு கி.மீ. தொலைவுடைய இச்சாலையில் இருபுறமும் சுவா் எழுப்பி, நடுவில் தாா் சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சாலையில் எந்த வித பிரச்னையும் ஏற்படாது. மேலும், இருபுறமும் ரூ. 18 லட்சம் செலவில் 40 மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. இச்சாலை அமைக்கும் பணியை பொங்கல் பண்டிகைக்குள் முடித்து திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் மேயா்.

அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினா்கள் எஸ். செந்தமிழ்ச்செல்வன், சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT