தஞ்சாவூர்

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனையகத்தில் காா்த்திகைத் தீப விளக்குகள் விற்பனை

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் காா்த்திகைத் தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை டிசம்பா் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Syndication

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் காா்த்திகைத் தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை டிசம்பா் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் தே. சக்திதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் காா்த்திகை தீபத் திருவிழா விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை நவம்பா் 14 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் களிமண், பித்தளை விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து விளக்குகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படும். இக்கண்காட்சி மூலம் ரூ. 3 லட்சம் விற்பனையாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT