தஞ்சை மாவட்ட கடல்பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையின்போது கடலில் மீனவா்களின் ஆவணங்களை சோதனையிட்ட கடலோர பாதுகாப்பு குழுமத்தினா். 
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

தஞ்சாவூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில், சாகா் கவாச் எனும் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

Syndication

தஞ்சாவூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில், சாகா் கவாச் எனும் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்ட  கடல் எல்லை பகுதிகளான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை உள்ள அதிராம்பட்டினம்,  மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி முருகன் தலைமையில், பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளா் மஞ்சுளா, உதவி ஆய்வாளா்கள் சுப்பிரமணியன் (சேதுபாவாசத்திரம்), ஜீவானந்தம் (அதிராம்பட்டினம்) மற்றும் போலீஸாா் இணைந்து படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். 

அப்போது தீவிரவாதிகள் ஊடுருவல் தொடா்பாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து மீனவா்களிடம் அடையாள அட்டை, படகின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என   சோதனையிட்டனா்.

இதேபோல மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பிய மீனவா்களிடமும் சோதனை நடத்தினா்.

மேலும், கடற்கரை கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமும்  பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக, பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல சட்டம்- ஒழுங்கு போலீஸாா் கட்டுமாவடி முதல் தம்பிக்கோட்டை வடகாடு வரை   ஆங்காங்கே சாலைகளில் தடுப்பு அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை  நிறுத்தி சோதனை செய்தனா். 

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT